Showing all 3 resultsSorted by price: high to low

தமிழ் சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்

Price range: ₹300.00 through ₹370.00
ஒரு சமூகத்தின் வீழ்ச்சி திடீரென நிகழ்வதில்லை. அது நூற்றாண்டுகள் நீளும் சிந்தனைச் சிதைவின் விளைவு. “தமிழ்ச்சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் - பகுதி1" தமிழரின் வரலாற்றை வெறும் அரசியல் சம்பவங்களின் தொகுப்பாக அல்லாது, சமூக-உளவியல் மாற்றங்களின் ஆய்வாக அணுகும் அரிய முயற்சியாகும். சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறம், வீரியம், சமத்துவம் கொண்ட சமூகம் எப்போது அடிமைத்தனத்திற்கும், ஜாதி அடுக்குகளுக்கும், கருத்தியல் சுரண்டலுக்கும் உள்ளானது? போர், பொருளாதார வேறுபாடு, நானிறக் கோட்பாடு, மதச் செருகல்கள், அரசியல் மாற்றங்கள் இவை எவ்வாறு தமிழரின் அடையாளத்தை மெல்ல மெல்ல மாற்றின? வரலாறு, வேதியியல், கணினியியல் ஆகிய பல்துறை கண்ணோட்டங்களுடன் இயலன், இராயன், பாலன் ஆகியோரின் உரையாடல் வடிவில் அமைந்துள்ள இந்த நூல், வாசகரை ஒரு பார்வையாளராக அல்ல, சிந்திக்கும் பங்கேற்பாளராக மாற்றுகிறது. இந்நூல் கேட்கும் கேள்விகள் கூர்மையானவை: தமிழன் எப்போது தன் அடையாளத்தை இழந்தான்? அறம் எப்போது அதிகாரத்தின் கருவியாக மாறியது.சமத்துவத்தின் மொழி எப்போது பிளவின்மொழியாக மாற்றப்பட்டது? வீழ்ச்சியின் வேர்களை அறிதலே எழுச்சியின் முதல் படி என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது. இது ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல - ஒரு சமூக சுய விழிப்புணர்விற்கான அழைப்பு.

வெனான்சியுஸ் வில்லனோவா

Price range: ₹160.00 through ₹190.00
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மறைப்பணியாளர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் ஆகிய துறைகளில், அவற்றின் தாக்கம் இன்றும் மாநிலத்தில் உணர முடிகிறது. சீர்திருத்த காலம் மறைபணி அமைப்புகளை - எல்லா வகையான தவறுகள் அல்லது ஊழல்களில் இருந்தும் தூய்மைபடுத்த உதவியது. சீர்திருத்தக் காலத்திற்குப் பிறகு இந்திய பெருநிலப்பரபிற்கு வந்த மறைப்பணியாளர்கள், புனிதர்களின் வாழ்க்கையை வாழ்ந்தனர். அத்தகு புனித வாழ்வை வாழ்ந்த சலேசிய இறை சித்தர்களுள் ஒருவர் தான், அருட்பணியாளர், அனந்தணர். வெனான்சியுஸ் வில்லொனொவா அவர்கள்.

நீர் உயிரின் வேர்

Price range: ₹140.00 through ₹170.00
நீர் வரலாற்றையும் அதை நிலைப்படுத்தி எதிர்கால தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டிய பொறுப்புணர்வையும் தனக்கான நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார். தற்போது பேசப்படும் நதிநீர் இணைப்பு என்பது லட்சம் கோடிகளைக் கடந்த செலவினத்தைத் தரக்கூடியது மட்டுமின்றி, இயற்கை உருவாக்கிய ஆற்று வழித்தடங்களைப் பாலைவனமாக்கும் முயற்சியாகவும் மாறிவிடக் கூடும். எனவே நதிநீர் இணைப்புக்கு மாற்றுத் திட்டமான இயற்கை வழிமுறைகளை நெறிகாட்டுகிற ஆசிரியரின் கடமையுணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கிற போது எனக்கு ஏற்பட்ட அறிவியல் சுற்றுப்பயண உள்ளக்களிப்பு உங்களுக்கும் ஏற்படும். படியுங்கள்.