தளவரலாறு
‘தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’
அரும்பொருள் யாதொன்றும் இல்’
சான்றோர் தளம் என்பது தமிழ் இலக்கிய நெறியில் வாழும் அறிவியல், பொறியியல், பொருளாதார, இலக்கிய,இயற்கை ஆர்வலர்களின் கூட்டமைப்பு ஆகும். இது 1992-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அனல்மின் இலக்கிய வட்டத்தின் ஒருங்கினைந்த வளர்ச்சியில் தோன்றிய புதியக் குழுமம் ஆகும். மேலும் இது இலக்கியத்துறையிலும், சமூகத்தொண்டிலும் தொடர்ந்து பயணிக்கும் வல்லுநர்கள், இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கையாளுதலுக்கான அடித்தளமாக ஜூன் 2020 இல் நிறுவப்பட்டது. இத்தளத்தின் கொள்கைகள் நெறியாளர்களின் ஆளுமைக்குரிய நேரிய வழிகாட்டலில் , நம் மக்களுக்கான, தற்சார்பு தகவல்தொழில் நுட்பத் தளமாக இயங்கும்.
இலக்கும் நோக்கமும்
இத்தளம் நம் மக்களின் உலகளாவிய வளர்ச்சிக்கான, அப்துல்கலாமின் 2020-ம் ஆண்டு, இலக்குக்கான அறிவுப் புரட்சியின், தமிழர் பங்களிப்பாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை நமக்குள்ள பட்டறிவை, இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, நாளைய இலக்கை தீர்மாணிக்க உதவும் கருவியாக இத்தளம் செயல்படும்.
நாடுகளின் பொருளாதாரங்கள் நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கின்றன என்ற நம்பிக்கை எங்கள் நோக்கத்தின் மையமாக உள்ளது.
இயற்கை ஏராளமான பல்லுயிர்களுடன், ஒரு நிலையான காலநிலை மற்றும் அனைவருக்கும் சமமான எதிர்காலம் கொண்ட ஒரு உலகத்தை உருவாக்குகிறது. இந்த இயற்கையின் சம நிலையை தரமான தரவுகளைக் கொண்டு, மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மக்களிடையே நிறுவுவதன் மூலம்,ஒருங்கிணைந்த மானுடத்தின் வாழ்க்கைத் தரம் நிலைத்தன்மைகொண்டதாக சீர்படும் என்ற நோக்கத்துடன் சான்றோர் தளம் முன்னேறும்.
எங்கள் வேர்களே, எங்கள் வளர்ச்சியின் ஆதாரம்.
வழிகாட்டும் ஒளியே, எங்கள் பயன்
வழிகாட்டும் ஒளியே, எங்கள் பயன்
தளத்தின் செயல்பாடுகள்
‘ஒன்றறிவு அதுவே, உற்று அறிவதுவே,
இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,
மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,
நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,
ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,
ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’
இரண்டறிவு அதுவே, அதனொடு நாக்கே,
மூன்றறிவு அதுவே, அவற்றொடு மூக்கே,
நான்கறிவு அதுவே, அவற்றொடு கண்ணே,
ஐந்தறிவு அதுவே, அவற்றொடு செவியே,
ஆறறிவு அதுவே, அவற்றொடு மனனே,
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’
எமது தளமும் ஐந்து நிலைக்கொண்டக் கட்டமைப்பைக் கொண்டது.
நிலை 1: மின் நூல்கள் வெளியிடுதல் –தமிழ் / ஆங்கிலம் (E Book Publication) – இந்திய மொழிகள் அனைத்திலும்.
நிலை 2: காட்சி ஊடகம் (Video Presentation)
நிலை 3: ஊடாடும் ஊடகம் (Interactive Presentation)
நிலை 4: மின் நூல்கள் – தேடு பொருள் காட்டிகளுடன் (E Books with search engine)
நிலை 5: செயற்கை நுண்ணறிவு கொண்ட பேசும் நூல்கள் (E Books with Artificial Intelligence)
நிலை 1: மின் நூல்கள் வெளியிடுதல் –தமிழ் / ஆங்கிலம் (E Book Publication) – இந்திய மொழிகள் அனைத்திலும்.
நிலை 2: காட்சி ஊடகம் (Video Presentation)
நிலை 3: ஊடாடும் ஊடகம் (Interactive Presentation)
நிலை 4: மின் நூல்கள் – தேடு பொருள் காட்டிகளுடன் (E Books with search engine)
நிலை 5: செயற்கை நுண்ணறிவு கொண்ட பேசும் நூல்கள் (E Books with Artificial Intelligence)
மின் நூல்கள் வெளியிடுதல் –தமிழ் / ஆங்கிலம் (E Book Publication) - இந்திய மொழிகள் அனைத்திலும்.
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் எளிய மனம்: இதுதான் சிறந்த வாழ்க்கை. “மண் திணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்புவதை வருவளியும், தீ முரணிய நீரும் என்றாங்கு, ஐம்பெரும் பூதத்து இயற்கை”
20 -ஆம் நூற்றாண்டில் தான் மேற்கத்திய அறிவியல் உலகம் “அண்டம்” தொடர்ந்து விரிவடைகிறது என்பதை அறிந்தது. ஆனால் “அகலிரு விசும்பு” என்று தொடர்ந்து விரிவடையும் அண்டத்தையும், காற்றே இல்லாத அண்ட வெளியை “வளிதிரி தரு மண்டலம்” என்றும்,தொல்காப்பியம் வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறது.
20 -ஆம் நூற்றாண்டில் தான் மேற்கத்திய அறிவியல் உலகம் “அண்டம்” தொடர்ந்து விரிவடைகிறது என்பதை அறிந்தது. ஆனால் “அகலிரு விசும்பு” என்று தொடர்ந்து விரிவடையும் அண்டத்தையும், காற்றே இல்லாத அண்ட வெளியை “வளிதிரி தரு மண்டலம்” என்றும்,தொல்காப்பியம் வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறது.
ஆய்வுக் கட்டுரைகள்
ஒரு சிறிய ஆய்வு. நமது வரவேற்பறையில், ஒரு செய்தித்தாளும், ஒரு புகைப்படத் தொகுப்பும், இருந்தால், முதலில் கைகள் புகைப்படத் தொகுப்பைத்தான் தொடுகின்றன. இரண்டுமிருந்து, தொலைக்காட்சியில் சுவையான காட்சி ஓடிக் கொண்டிருந்தால், இரண்டையும் விட்டுவிட்டு அதைப் பார்த்தவாறே அமர்ந்திருப்போம். இது மனித இயல்பு. இது போன்ற மெல்லிய மனித உணர்வுகளிலிருந்து, மொழி, இலக்கியம், மனிதவளம், சுற்றுச்சுழல், விவசாயம், கல்வி, அறிவியல், தொழில் நுட்பம், வானியல் சார்ந்த அனைத்து ஆய்வுகளும் வெளியிடப்பட்டு விவாதத்துக்கு உட்படுத்தப்படும்.
சுய முன்னேற்றம்
உழைப்பும், நல்ல செயல்திறனுமே நம்மை, வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்.தெளிந்த சிந்தையுடன்,உரியப் பயிற்சியுடன் செயலில் ஈடுபடும் இளந்தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவேண்டுமென்பதே எப்போதுமுள்ள நமது இலக்கு. சுய முன்னேற்ற நூல்களும், நன்னெறி நூல்களும் மின்னூல்களாகவும்,காணொளிகளாகவும் இத்தளத்தில் கிடைக்கும்.
தொழில்நுட்பம்
ஒரு கைப்பேசியியே கணிப்பானாக, வனொலியாக செயல்படுகிறது. ஒரு கைப்பேசியில் மின்னிதழுமிருக்கிறது, தொலைக்காட்சியுமிருக்கிறது. வேண்டும்போது, மீண்டும், மீண்டும் மின்னிதழை வாசிக்கமுடிகிறது. காணொளியை ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளும் வசதியுமிருக்கிறது. எல்லாம் உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்ட நிலையில் அனைத்துத் தொழில் நுட்பங்களும் தேவைதான், சிறப்புதான்.
530 கோடி மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் , இருக்க இருப்பிடமும் தொழில் நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாயிற்று. இப்பூவுலகின் மாந்தர் அனைவருக்கும், மருத்துவமும் தொழில் நுட்பத்தினால் மட்டுந்தான் கொண்டுசெல்ல முடிகிறது. தொழில்நுட்பம், சார்ந்த நூல்களும் இத்தளத்தில் வெளியிடப் படும்,விவாதிக்கப்படும் .
இலக்கியம்
இலக்கியம் காலத்தின் கண்ணாடி. மொகஞ்சதாரோ ஆனாலும் சரி,கீழடி ஆனாலும் சரி , நம் முன்னோர்களின் வாழ்வியலை அவர்களின் கல்வெட்டுக்கள் மூலமும்,ஓலைச் சுவடிகள் மூலமும் அறிகிறோம். கல்வெட்டுக்கள் காலம் கடந்து,ஓலைச்சுவடிகளின் காலம் கடந்து, தாள்களில் அச்சிட்டக் காலத்தை மெதுவாகக் கடந்துக் கொண்டிருக்கிறோம்.நாளை மின்னூல்களும்,இணையவழி செய்திகளும் கோலோச்சும் காலம்.இன்று மின்னூல்கள் பதியப்படிகினறன.
அறிவியல்
தொழில் நுட்பம் அறிவியலின் கனி. அறிவியல், மருத்துவத்தை,விவசாயத்தை காக்கவும்,வளர்க்கவும் செய்யும். அறிவியல் இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும்; முறைமைகளின் தொகுப்பாகும்.
அறிவியல் வழிமுறை என்பது, புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும், பட்டறிவாலும், செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும் இருக்கும். அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறியும் பண்புக்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். அறிவியல் நூல்கள் அவற்றின் விழுமியப் பண்புக்ளோடு இத்தளத்தில் வெளியிடப்படும்.
பொழுதுபோக்குகள்
விளையாட்டுகள், அவற்றின் சட்டதிட்டங்கள், அவற்றின் சிறப்புப் பயன்கள் பிற வழிகாட்டு நெறிகள் அடங்கிய நூல்கள் வரவேற்கப்படுகினறன.விடியோ விளையாட்டுகளை விலையாடும் முறைகள்,அவற்றை உருவாக்கும் தொழில் நுட்பங்கள் அடங்கிய நூல்களுக்கு வாசகர் வரவேற்பு எப்போதும் உள்ளது.