ஆய்வுக் கட்டுரைகள்
ஒரு சிறிய ஆய்வு. நமது வரவேற்பறையில், ஒரு செய்தித்தாளும்,
ஒரு புகைப்படத் தொகுப்பும், இருந்தால், முதலில் கைகள் புகைப்படத்
தொகுப்பைத்தான் தொடுகின்றன. இரண்டுமிருந்து, தொலைக்காட்சியில்
சுவையான காட்சி ஓடிக்கொண்டிருந்தால், இரண்டையும் விட்டுவிட்டு
அதைப் பார்த்தவாறே அமர்ந்திருப்போம். இது மனித இயல்பு.
இதுபோன்ற வெகு எளிமையான கண்ணோட்டங்களிலிருந்து, மொழி, அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம், கல்வி, இறையியல் போன்ற அனைத்து துறைகளிலும் ஆய்வுகளை ஊக்கப்படுத்தி நூல்களை வெளியிட சான்றோர்தளம் விரும்புகிறது.
சுய முன்னேற்றம்
உழைப்பும், நல்ல செயல்திறனுமே நம்மை, வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும்.தெளிந்த சிந்தையுடன்,உரியப் பயிற்சியுடன் செயலில் ஈடுபடும் இளந்தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கவேண்டுமென்பதே எப்போதுமுள்ள நமது இலக்கு. சுய முன்னேற்ற நூல்களும், நன்னெறி நூல்களும் மின்னூல்களாகவும்,காணொளிகளாகவும் இத்தளத்தில் கிடைக்கும்.
தொழில்நுட்பம்
ஒரு கைப்பேசியியே கணிப்பானாக, வனொலியாக செயல்படுகிறது. ஒரு கைப்பேசியில் மின்னிதழுமிருக்கிறது, தொலைக்காட்சியுமிருக்கிறது. வேண்டும்போது, மீண்டும், மீண்டும் மின்னிதழை வாசிக்கமுடிகிறது.காணொளியை ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ளும் வசதியுமிருக்கிறது. எல்லாம் உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்ட நிலையில் அனைத்துமே தேவைதான், சிறப்புதான்.
530 கோடி மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் , இருக்க இருப்பிடமும் தொழில் நுட்ப வளர்ச்சியால் சாத்தியமாயிற்று.
இப்பூவுலகின் மாந்தர் அனைவருக்கும்,மருத்துவமும் தொழில் நுட்பத்தினால் மட்டுந்தான் கொண்டுசெல்ல முடிகிறது.
தொழில்நுட்பம், சார்ந்த நூல்களும் இத்தளத்தில் வெளியிடப் படும்,விவாதிக்கப்படும் .
இலக்கியம்
இலக்கியம் காலத்தின் கண்ணாடி. மொகஞ்சதாரோ ஆனாலும் சரி,கீழடி ஆனாலும் சரி , நம் முன்னோர்களின் வாழ்வியலை அவர்களின் கல்வெட்டுக்கள் மூலமும்,ஓலைச் சுவடிகள் மூலமும் அறிகிறோம். கல்வெட்டுக்கள் காலம் கடந்து,ஓலைச்சுவடிகளின் காலம் கடந்து, தாள்களில் அச்சிட்டக் காலத்தை மெதுவாகக் கடந்துக் கொண்டிருக்கிறோம்.நாளை மின்னூல்களும்,இணையவழி செய்திகளும் கோலோச்சும் காலம்.இன்று மின்னூல்கள் பதியப்படிகினறன.
அறிவியல்
தொழில் நுட்பம் அறிவியலின் கனி. அறிவியல், மருத்துவத்தை,விவசாயத்தை காக்கவும்,வளர்க்கவும் செய்யும். அறிவியல் இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும்; முறைமைகளின் தொகுப்பாகும்.
அறிவியல் வழிமுறை என்பது, புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும், பட்டறிவாலும், செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும் இருக்கும். அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறியும் பண்புக்குட்பட்டதாகவும் இருக்க வேண்டும். அறிவியல் நூல்கள் அவற்றின் விழுமியப் பண்புக்ளோடு இத்தளத்தில் வெளியிடப்படும்.
எங்கள் செயல்பாடு
நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள் மற்றும் எளிய மனம்: இதுதான் சிறந்த வாழ்க்கை.”மண் திணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்புவதை வருவளியும், தீ முரணிய நீரும் என்றாங்கு, ஐம்பெரும் பூதத்து இயற்கை” 20 -ஆம் நூற்றாண்டில் தான் மேற்கத்திய அறிவியல் உலகம் “அண்டம்” தொடர்ந்து விரிவடைகிறது என்பதை அறிந்தது. ஆனால் “அகலிரு விசும்பு” என்று தொடர்ந்து விரிவடையும் அணத்தையும், காற்றே இல்லாத அண்ட வெளியை “வளிதிரி தரு மண்டலம்” தொல்காப்பியம் வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறது.