ஐம்பேராற்றல் பெருவிழா

சான்றோர்தளம்: தமிழ் இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவையின் இணைப்பு

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’

சான்றோர் தளம் என்பது தமிழ் இலக்கிய நெறியில் வாழும் அறிவியல், பொறியியல், பொருளாதார, இலக்கிய,இயற்கை ஆர்வலர்களின் கூட்டமைப்பு ஆகும். இது 1992-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அனல்மின் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தோன்றிய புதியக் குழுமம் ஆகும்.

இலக்கியத்துறையிலும், சமூகத்தொண்டிலும் தொடர்ந்து பயணிக்கும் வல்லுநர்கள், இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மேம்பாட்டிற்காக ஜூன் 2020 இல் நிறுவப்பட்டது. இத்தளத்தின் கொள்கைகள் நெறியாளர்களின் ஆளுமைக்குரிய நேரிய வழிகாட்டலில் , நம் மக்களுக்கான, தற்சார்பு தகவல்தொழில் நுட்பத் தளமாக இயங்கும்.

இலக்கும் நோக்கமும்

இத்தளம் நம் மக்களின் உலகளாவிய வளர்ச்சிக்கான, அப்துல்கலாமின் 2020-ம் ஆண்டு, இலக்குக்கான அறிவுப் புரட்சியின், தமிழர் பங்களிப்பாகும். சங்ககாலம் தொட்டு இன்றுவரை நமக்குள்ள பட்டறிவை, இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, நாளைய இலக்கை தீர்மாணிக்க உதவும் கருவியாக இத்தளம் செயல்படும்.

 

சான்றோர்தளத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

சான்றோர்தளத்தின் வேர்கள் 1992-ஆம் ஆண்டு தொடங்கிய ‘அனல்மின் இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பில் உள்ளன. இந்த வட்டம் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் செயல்பட்டு வந்தது. 2020-ஆம் ஆண்டில், நவீன தொழில்நுட்பத்தின் தேவையை உணர்ந்து, இது ‘சான்றோர்தளம்’ என்ற பெயரில் ஒரு சுயமுன்னேற்ற தகவல்தொழில்நுட்ப தளமாக உருவெடுத்தது. இதன் இணையதளம் (www.sandrorethalam.in) மூலம், பயனர்கள் இலக்கிய நூல்கள், அறிவியல் காணொளிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு உள்ளடக்கங்களை அணுக முடியும். இந்த தளம், தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்து, இளம் தலைமுறையினருக்கு மன எழுச்சியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சான்றோர்தளம் ஒரு கூட்டமைப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், கல்வி, சட்டம் போன்ற பல துறைகளில் ஆய்வுகளை ஊக்குவித்து, அதன் மூலம் உலக மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றைத் தொழில்நுட்பத்தின் துணையோடு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது சான்றோர்தளத்தின்  இலக்கு.

சான்றோர் தளம் என்ற அமைப்பின் பெயரையும் செயல்திட்டங்களையும் நான்  முன்மொழிய, செயற்கை நுண்ணறிவு முனைவர் பாலமுருகன் அவர்கள் வழிமொழிந்து உற்சாகமூட்டினார். இலக்கிய வட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த தமிழ் ஏலன் அவர்கள், இன்றைக்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் இயக்கத்துக்கு உந்துதலாக இருக்கிறார். தமிழ் இயலனின் ஒத்துழைப்போடும், பாவலர் மன்னர் மன்னன் அவர்களின் முன்னெடுப்பில், பேராசிரியர் வெற்றி நிலவன் அவர்களுடைய நெறி ஆளுகையில், முனைவர் ஷாலினி ஜெரால்ட், தொழில் முனைவர். இயேசுராஜ் போன்ற தமிழ் ஆளுமைகளின் ஒருங்கிணைப்பில், சான்றோர் தளம் 100 நூல் ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நிமிர் இலக்கியவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர்/பொறியாளர். பாபு சசிதரன், சான்றோர்தளத்தின் நிகழ்வுகளில், ஒருங்கிணைப்பாளர்களோடு, சேர்ந்தேப் பயணிக்கிறார்.

ஐம்பது எளிய அரசு பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, சோவியத் ரஷ்யாவின் விண்வெளி அறிஞர்களோடு உரையாடுவதற்காக, மாஸ்கோ அழைத்துச் சென்றுவந்த பொறியாளர் பாலமுருகன், இந்திய பசுமை பொறியாளர்களோடு (IGEN) இணைந்து செயல்படுபவர்.  பசுமைப் பொறியாளர்களின் முதன்மை இலக்கான ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சி விளக்குகள் சான்றோர் தளத்தின் இலக்குகளோடு நூறு விழுக்காடு பொருந்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals – SDGs) என்பவை, உலகளாவிய அளவில் வறுமை, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயல்திட்டம். இந்த இலக்குகள் 2015-இல் ஐ.நா.வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2030-ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் ஒரு பொதுவான திட்டமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 17 இலக்குகளையும் நோக்கியப் பயணமாகவே சான்றோர்தளத்தின் செயல்பாடுகள்     உள்ளன.

  1. வறுமை ஒழிப்பு (No Poverty): “எங்கும், எந்த வடிவத்திலும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்பதே இந்த இலக்கின் நோக்கம். இது வெறும் பணப் பற்றாக்குறை மட்டும் அல்ல. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற அனைத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இதன் சாராம்சம்.
  2. பசியை ஒழித்தல் (Zero Hunger): “பசியை ஒழித்து, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து, ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்” என்பது இந்த இலக்கின் விளக்கம். இதன் மூலம், எதிர்காலத் தலைமுறையினருக்குப் போதுமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  3. நல்ல ஆரோக்கியமும், நலவாழ்வும் (Good Health and Well-being): “அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிசெய்வது மற்றும் நலவாழ்வை மேம்படுத்துவது” இந்த இலக்கின் குறிக்கோள். மருத்துவ வசதிகள், தடுப்பூசிகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தாய் மற்றும் சேய் நலம் போன்றவற்றை மேம்படுத்துவது இதில் அடங்கும்.
  4. தரமான கல்வி (Quality Education): “அனைவருக்கும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வியை உறுதிசெய்வது, வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிப்பது” இதன் நோக்கம். இது அனைவருக்கும் கல்வி கிடைப்பதையும், அந்தக் கல்வி பயனுள்ளதாக இருப்பதையும் உறுதிசெய்கிறது.
  5. பாலின சமத்துவம் (Gender Equality): “பாலின சமத்துவத்தை அடைவது மற்றும் அனைத்துப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அதிகாரமளிப்பது” இந்த இலக்கின் மையக்கருத்து. சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை வழங்குவது இதன் இலக்கு.
  6. சுத்தமான நீரும், சுகாதாரமும் (Clean Water and Sanitation): “அனைவருக்கும் நீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்து, அவற்றை நிலையான முறையில் நிர்வகிப்பது” என்பது இதன் நோக்கம். பாதுகாப்பான குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை இதில் முக்கியம்.
  7. மலிவான, தூய்மையான எரிசக்தி (Affordable and Clean Energy): “அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் நவீன எரிசக்தி கிடைப்பதை உறுதிசெய்வது” இதன் இலக்கு. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதையும், ஆற்றல் திறனை அதிகரிப்பதையும் வலியுறுத்துகிறது.
  8. கண்ணியமான வேலையும், பொருளாதார வளர்ச்சியும் (Decent Work and Economic Growth): “அனைவருக்கும் நீடித்த, உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, முழுமையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வேலைவாய்ப்பு, கண்ணியமான வேலை” ஆகியவற்றை மேம்படுத்துவது இந்த இலக்கின் குறிக்கோள்.
  9. தொழில், புத்தாக்கம், உள்கட்டமைப்பு (Industry, Innovation and Infrastructure): “நீடித்த உள்கட்டமைப்பை உருவாக்குவது, உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்மயமாக்கத்தை ஊக்குவிப்பது, புத்தாக்கத்தை வளர்ப்பது” இந்த இலக்கின் நோக்கம். இது நவீனமயமாக்கத்தையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் உள்ளடக்கியது.
  10. சமத்துவமின்மையைக் குறைத்தல் (Reduced Inequalities): “நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பது” இதன் இலக்கு. இது ஏழை, பணக்காரர் என்ற வேறுபாட்டைக் குறைப்பதுடன், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்புகளை வழங்க முயல்கிறது.
  11. நிலையான நகரங்களும், சமூகங்களும் (Sustainable Cities and Communities): “நகரங்களையும், மனிதக் குடியிருப்புகளையும் உள்ளடக்கியதாக, பாதுகாப்பானதாக, நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மற்றும் நிலையானதாக மாற்றுவது” இந்த இலக்கின் நோக்கம். போக்குவரத்து, வீட்டுவசதி, பசுமை இடங்கள் போன்றவற்றை மேம்படுத்துவது இதில் அடங்கும்.
  12. பொறுப்பான நுகர்வும், உற்பத்தியும் (Responsible Consumption and Production): “நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி முறைகளை உறுதிசெய்வது” இதன் இலக்கு. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
  13. காலநிலை நடவடிக்கை (Climate Action): “காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்களை எதிர்த்துப் போராட அவசர நடவடிக்கை எடுப்பது” இதன் நோக்கம். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  14. நீருக்கடியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாத்தல் (Life Below Water): “பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து, அவற்றை நிலையான முறையில் பயன்படுத்துதல்” இந்த இலக்கின் குறிக்கோள். கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது, கடல் மாசுபாட்டைக் குறைப்பது இதில் அடங்கும்.
  15. நிலத்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாத்தல் (Life on Land): “நிலச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்து, அவற்றைப் புதுப்பிப்பது, பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவது, பல்லுயிர்ப்பெருக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது” இந்த இலக்கின் நோக்கம். காடுகளைப் பாதுகாப்பது, உயிரினங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இதில் முக்கியம்.
  16. அமைதி, நீதி, வலுவான அமைப்புகள் (Peace, Justice and Strong Institutions): “நீடித்த வளர்ச்சிக்காக அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவிப்பது, அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிசெய்வது, திறமையான மற்றும் பொறுப்புள்ள நிறுவனங்களை உருவாக்குவது” இந்த இலக்கின் நோக்கம்.
  17. இலக்குகளை அடைவதற்கான கூட்டாண்மை (Partnerships for the Goals): “நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய கூட்டாண்மையை புத்துயிர் பெறுவது” என்பது இந்த இலக்கின் குறிக்கோள். இந்த 16 இலக்குகளையும் அடைவதற்கு உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

சான்றோர்தளம், பொறியாளர்களின் கூட்டமைப்போடு, இலக்கியக் குழுக்களுடனும் இணைந்து சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டங்கள், விவாத அரங்குகளையும் நடத்தி வருகிறது.10.10.2020 அன்று, ‘நீர் உயிரின் வேர்’ என்ற நூலை, இந்திய பசுமைப் பொறியாளர்களின் நிறுவனமும்(IGEN), சான்றோர் தளமும் இணைந்து வெளியிட்டன. அந்நூலைப் பற்றிய ஆய்வுரை, பாவலர். மன்னர் மன்னன் தமிழாசிரியர், முனைவர் லியோ ஸ்டான்லி வேதியியல் பேராசிரியர், மின்னியல் பொறியாளர், முனைவர். தமிழியலன் என மூவரால், இலக்கியம், அறிவியல், பொறியியல் ஆகிய மூன்று கோணங்களில் ஆயப்பட்டன. தமிழை மீட்டெடுத்த, அருட்திரு.கால்ட்வெல்லின் ‘ஒப்பிலக்கணம்’ கவிஞர். பாபு சசிதரன் (பொறியாளர்), பாவலர். மன்னர் மன்னன் (வேர் சொல் ஆய்வறிஞர்), ஆகிய இருவர், இரண்டிரண்டு அமர்வுகளாக, நான்கு அமர்வுகளில் ஆய்ந்தார்கள்.  

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மற்றொரு முதன்மை நூல் ஐந்திரம் ஆகும். ஏராளமானக் கணிதப் பாக்களைக் கொண்ட ஐந்திரம் என்பது பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் ஒரு இலக்கண நூல். தொல்காப்பியத்திற்கு முந்தைய, தொல்காப்பியர் பின்பற்றிய இலக்கணத் தத்துவமாக இது கருதப்படுகிறது. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற பனம்பாரனார் கூற்றின்படி, ஐந்திர இலக்கணத்தின் துணையோடு எழுதப்பட்டதே தொல்காப்பியம் ஆகும். ஐந்திறம்/ஆசிரியர்:மயன்/  பதிப்பாளர்:சென்னை : தொழில் நுட்பக் கல்வி இயக்ககம்/1986/ ஆவண இருப்பிடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம்.

ஈ.ஜே.சுந்தர்

மா.சுரேஷ்

வா.மு.செ.திருவள்ளுவர்

பீட்டர் ராஜன் அமிர்தம்

முருகதீட்சண்யா

தரங்கை.பன்னீர் செல்வம்

மது.ராமகிருஷ்ணன்

டாக்டர் பி.தனசரதி தாசன்

ம.அமேரசன்

குமரி நாடன்

வி.பூமிநாதன்

வேலரசு

தமிழிழியலன்

கோபிநாதன் பச்சையப்பன்

பாபு சசிதரன்

தியாகராஜன் ரமேஷ்

ஞா.லா. இரவிச்சந்திரன்

கே.வசந்தகுமார்

கு.ரா

மதுரை பாபராஜ்

கலக்கல் கந்தசாமி

கர்னல்.பா.கணேசன்

வி.பி.சிங்

எட்வின் வசந்தன்

தமிழ் அன்பன்

டாக்டர்.நாவலர்.நெடுஞ்செழியன்

மன்னர் மன்னன்

டி.ஆர்.தமிழ்மணி

சி.என்.அண்ணாதுரை

அ.பிரான்சிஸ்

மாத்தலை சோமு

சுகபாலா

டாக்டர்.காந்திமதி,

புலவர்.நன்னன்

நந்திவர்மன்

ஆயிஷா  நடராசன்

திருவை பாபு

ராஜலட்சுமி

துரை வசந்தராஜன்

நவீனா அலெக்சாண்டர்

டாக்டர்.ஐ.ஜே.எம்.இன்பா குமார்

கவுதமச்சன்னா

ஹீலர் பாஸ்கர்

ஈ.சுந்தரமூர்த்தி

கே.களியமூர்த்தி

நவீனா அலெக்சாண்டர் வினி                                                                    தொ.பரமசிவன்

போன்ற ஆசிரியர்களின் படைப்புகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. புதிய நூலாசிரியர்களை ஊக்கப்படுத்தி ஆற்றுப் படுத்துவதே சான்றோர்தளத்தின் வழிமுறையாகும்.

  தனிப்பட்ட முறையில் நான் பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டறிவு கொண்ட தமிழ் ஆர்வலன். குறிப்பாக, நீர் சீராக்கும் (water treatment) துறையில் எனக்கு ஆழ்ந்த பட்டறிவு உண்டு. அதன் அடிப்படையில், நான் எழுதிய “Principles of Water Treatment” என்ற நூல் அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கிறது. நீர் உயிரின் வேர்,சான்றோர்தளம் பதிப்பகம் வெளியிட்ட இந்த புத்தகம், இப்போது அறம் பதிப்பக வெளியீடாகக் கிடைக்கிறது. தாமரைப் பதிப்பகம் ‘Domestic Water Treatment’ என்ற பொதுமக்களுக்கான அறிவியல் நூலையும், வெனான்சியுஸ் வில்லனோவா என்ற இத்தாலியத் துறவியின் வரலாற்றையும் எழுதியிருக்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு, நீங்கள் நமது, இணையதளமான www.sandrorethalam.in ஐப் பார்வையிடலாம். மேலே குறிப்பிட்டதைப் போன்று, தமிழ் இலக்கிய (தமிழியல்) நெறியில் வாழும் அறிவியல், பொறியியல், பொருளாதார, இலக்கிய, இயற்கை ஆர்வலர்கள் சேர்ந்துப் பயணிப்போம், வாருங்கள்.  

சான்றோர் தளம் தன்னுடைய ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை, ஐம்பெரும் ஆற்றங்களின் திருவிழாவாக கொண்டாடுகிறது. நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்து ஆற்றல்களால் எல்லா உயிர்களும் இயக்கப்படுகின்றன. இயற்கையோடு இயைந்த தொழில் நுட்பங்களே, நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளாக அமைய முடியும். எனவே, நிலையான  வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, உலகத் தொழில் முனைவோர்களுக்கு, வழிகாட்டிகளாக உள்ள  இந்திய பசுமை பொறியாளர்களின் ஒத்துழைப்போடு, சென்னை அரிமா சங்கத்தின் முன்னெடுப்பான மரக்கன்றுகளை நடுதல் என்ற பசுமை சார்ந்த நிகழ்வை பத்மபூஷன் முனைவர் சிவதாணு பிள்ளை தொடங்கிவைக்கிறார்கள். பொருளாதாரம், வரலாறு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும், முனைவர் கருணானந்தம், கணக்காயர் பிரதாப் போன்றோர் சிறப்பித்து, சான்றோர்தளத்தின் பன்முகத்தன்மையை உறுதிபடுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு சான்றோர்தளத்தின் ஒருங்கிணைப்பாளர்களின் நன்றி.

சான்றோர் தளத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவை, ஒருங்கிணைந்து நடத்திய பசுமை பொறியாளர்கள் நிறுவனம், அரிமா சங்கம், அறம் பதிப்பகம், பேச்சி கண்ணன் அறக்கட்டளை, ஜீவன் பேக் சிஸ்டம்ஸ், மாசாபி பவர்டெக் பிரைவேட் லிமிடெட், நிமிர் இலக்கிய வட்டம் போன்ற அனைத்து இலக்கிய, தொழில் அமைப்புகளுக்கு நன்றி.

அமிர்தம் பீட்டர் ராசன்

(சான்றோர்தளத்துக்காக)